(FASTNEWS|COLOMBO) – நேற்று(07) மாலை 06 மணி முதல் இன்று(08) காலை 06 மணி வரை கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 5 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறையினரால் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரையில் 7666 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.