கோப் குழு விசாரணைகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை, அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தத்துக்கமைய, கோப் குழு உள்ளிட்ட மேற்பார்வை குழுவின் விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட, நாளை(09) முதல் ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, நாளை(09) பிற்பகல் 2.30 மணிக்கு கோப் குழு கூடவுள்ளதுடன், குறித்த குழுவின் சகல விசாரணை நடவடிக்கைகளையும் ஊடகங்கள் முன்னிலையில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.