வடக்கில் சிங்களக் குடியேற்றத்துக்கு ஒருபோதும் இடமில்லை – பிரதமர்

(FASTGOSSIP| COLOMBO) – வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க, ஒருபோதும் தான் இடமளிக்கப் போவதில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(07), பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.