(FASTNEWS|COLOMBO)- களனி பல்கலைக்கழகத்தின் கணனி மற்றும் தொழிநுட்ப பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு சிரேஷ்ட பேராசிரியர்கள் 03 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அதன் அறிக்கையினை ஒரு வாரத்திற்குள் பிரதி பேராசிரியரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.