“காலில் கிடப்பது பந்து அல்ல… தமிழினம்..” – சஜித் இனது புகைப்படத்துடன் பரவலாகும் பதிவு (PHOTO)

(FASTGOSSIP| COLOMBO) – 2020 ஜனாதிபதி வேற்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் களமிறக்கப்படும் என இந்நாட்களில் உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது மக்களுடன் மக்களாக சேர்ந்து கால்பந்து ஆடுவது தொடர்பிலான புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வருகின்றது.

குறித்த புகைப்படத்திற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் தத்தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், முகநூல் கணக்கொன்றில் குறித்த புகைப்படத்திற்கு “காலில் கிடப்பது பந்து அல்ல… தமிழினம்..” என தனது கருத்தினை பதிவிட்டுள்ளமை வித்தியாசமாக இருந்தது எனலாம்..

குறித்த புகைப்படம்;