(FASTNEWS|COLOMBO ) – பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவுடான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு சபை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.