தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 797 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.