(FASTNEWS|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தில் இன்றும்(15) நாளையும்(16) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 858 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் 8 407 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் இம் மாதத்தின் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 2 079 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால், தமது சூழலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு, மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.