எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எதிரி தொடர்பில் நன்கு அறிந்து செயற்படும் இராணுவத்தினை உருவாக்க முயற்சி

(FASTNEWS | COLOMBO) – எந்த ஒரு எதிரியையும் எதிர்கொள்ள இராணுவம் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எதிரி தொடர்பில் நன்கு அறிந்து அதனை எதிர்கொள்ள தேவையான சக்தியை இராணுவத்தினுள் உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.