மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ராணித் தோட்டத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.