2020ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை இன்று முதல்

(FASTNEWS|COLOMBO)- 2020 கல்வியாண்டுக்கான இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(16) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ஏனைய அனைத்து பாடசாலைகளுக்குமான 2020 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள், நாடு முழுவதுமுள்ள பணிமனைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விநியோக நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.