களு கங்கையினை அண்டி வாழும் மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களு கங்கையின் மில்லகந்த என்ற இடத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மாலா அலவத்துக்கொட தெரிவித்திருந்தார்.

மேலும், நீர் மட்டம் அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.