(FASTNEWS|COLOMBO)- சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் இருந்து சென்ற ஆண்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு திருப்பியனுப்பட்டவர்கள் விமான நிலைய குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.