பெட்ரோல் பவுசர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO ) – கென்யாவில் இருந்து காங்கோவிற்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற பெட்ரோல் பவுசர் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பெட்ரோல் பவுசர் வெடித்து தீப்பிடித்ததனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.