(FASTNEWS|COLOMBO ) – டோனி நம் நாட்டுக்காக நிறைய செய்துள்ளதுடன் இந்திய அணிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். சமீபத்தில், டோனி நிறைய விளையாடியுள்ளார், அவர் தனான விலக வேண்டிய நேரம் இது என இந்திய துடுப்பாட்ட வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் விடயத்தில் கடுமையான முடிவு எடுக்க வேண்டிய தேர்வாளர்கள் குறித்து அண்மையில் இந்திய துடுப்பாட்ட வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு டோனி தேவை என்று விராட் கோஹ்லி கூறியிருந்தாலும், தேர்வாளர்கள் கடுமையான முடிவை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று திவாரி மேற்கோளிட்டுள்ளார்.
சமீபகாலமாக டோனியின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது எனவும் இது ஒரு இன்னிங்ஸ் அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இருந்திருந்தால் நான் சொல்லியிருக்க மாட்டேன். கடந்த காலத்தின் அடிப்படையில் தேர்வாளர்கள் டோனிக்கு வாய்ப்புகளை அளிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை என மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், நம் நாட்டில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் இந்திய அணி யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. இது தேசத்தின் அணி, அதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் திவாரி கூறினார்.