(FASTNEWS|COLOMBO ) – இந்த வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 38,180பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 17,069 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய ஆறு மாவட்டங்கள் டெங்கு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் எப்போதும் அவதானம், முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.