(FASTNEWS | COLOMBO) -இலங்கை இருபதுக்கு 20 அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த அணியின் தலைமைத்துவத்துக்கு மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவுவதாக தெரவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், லசித் மாலிங்க தலைவராக நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியிருந்தாலும் அது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தால் தற்போது வெளியாகியிருக்கு அவருக்கு பதிலாக நிரோசன் திக்வெல்ல அல்லது குசால் ஜனித் பெரேரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக விளையாட்டி விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு மற்றைய வீரர்கள் நியமிக்கப்பட்டால் அவர் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கு கொள்வது பற்றி என்ன தீர்மானம் எடுப்பார் என்பதே தற்போது எழுந்துள்ள கோள்வியாகவுள்ளது.