(FASTNEWS|COLOMBO) – நேற்று(20) காலை 06 மணி முதல் இன்று(21) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 9 ஆயிரத்து 692 சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.