(FASTNEWS|COLOMBO ) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது, 2020ஆம் ஆண்டில் தங்களது சொந்த மண்ணில் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அட்டவணையின் படி இங்கிலாந்து அணியானது, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 6 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகள் போன்ற கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுடன் விளையாடவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது தொடராக இது அமைந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை நிறைவு செய்கின்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அடுத்த நான்கு நாட்களுக்குள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்கள் போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் இங்கிலாந்தில் தங்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரின் பின்னர் டி20 சர்வதேச தொடரிலும் விளையாடவுள்ளது.
ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகின்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடர் செப்டம்பர் மாத ஆரம்பம் வரை மூன்று டி20 சர்வதேச போட்டிகளிலுடன் நடைபெறவுள்ளது.
அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று இங்கிலாந்தின் பாகிஸ்தானுடனான டி20 சர்வதேச தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது.
England schedule 2020:
West Indies:
First test: June 4-8, The Oval
Second test: June 12-16, Edgbaston
Third test: June 25-29, Lord’s
Australia:
First T20: July 3, Chester-le-Street
Second T20: July 5, Old Trafford
Third T20: July 7, Headingley.
First ODI: July 11, Lord’s
Second ODI: July 14, Rose Bowl
Third ODI: July 16, Bristol
Pakistan:
First test: July 30-August 3, Lord’s
Second test: August 7-11, Old Trafford
Third test: August 20-24, Trent Bridge
First T20: August 29, Headingley
Second T20: August 31, Sophia Gardens
Third T20: September 2, Rose Bowl
Ireland:
First ODI: September 10, Trent Bridge
Second ODI: September 12, Edgbaston
Third ODI: September 15, The Oval