(FASTNEWS|COLOMBO) – நேற்று(21) காலை 06 மணி முதல் இன்று(22) காலை 06 மணி வரையில் 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 05 ஆம் திகதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் இதுவரை 9 ஆயிரத்து 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.