விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதல் திட்டம் வெளியானது

 

(FASTNEWS|COLOMBO) -தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது பிரபுக்கள் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் மருத்துவர் சிவரூபனிடம் விசாரணை நடத்திய போது இந்த விடயங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள இணைய தளம் தெரிவித்துள்ளது.

தெற்கில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்றை மேற்கொள்வதற்கு இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பினரும், பொலிஸாரும் இந்த சதித் திட்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.இந்த குண்டுத் தாக்குதல்களுக்காக இருநூறு கிலோ கிராம் எடையுடைய சீ4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படவிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.