தனிவழியில் பயணிக்க தயாராக உள்ள சஜித் அணி

(FASTNEWS|COLOMBO) -ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க தவறினால், சஜித் ஆதரவு அணியைச் சேர்ந்த 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக பயணிக்கத் தயாராக இருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் கூட இந்தப் பிரச்சினையில் பொது இணக்கப்பாடு எட்டப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே உள்ளது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அணியினர் மாத்தறையில் மக்கள் கூட்டத்தை நடத்தி தமது பலத்தை மீண்டும் நிரூபித்திருந்த நிலையில் அன்றைய தினமே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இராப்போசன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அமைச்சர் சஜித் பிரேமாதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர்.