(FASTGOSSIP|COLOMBO) – இங்கிலாந்து வெற்றிக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் தனது வெற்றியின் இரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்கள் எடுத்து, அவுஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டி வெற்றியின் பின் பேசுகையில், தனது இரகசிய ஆயுதமே தனது மனைவி Clare என புகழ்ந்து, தனது வெற்றியை அவளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
29 வயதான மனைவி Clare தனது சிறந்த தருணங்களிலும் இருண்ட தருணங்களிலும் என்னுடன் நின்றார், Clare பல ஆண்டுகளாக புத்திசாலித்தனமாகவும் ஆதரவாகவும் இருந்தார்.
அத்தகைய ஒரு அற்புதமான நாளுக்குப் பிறகு அவளைப் பார்த்து அவளுடன் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதேவேளை, உலகக் கிண்ண இறுதி போட்டியில் நட்சத்திர வீரராக ஜொலித்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், வெற்றியை தன்னுடைய மனைவிக்கு காணிக்கையாக்குவதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.