(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய காடான அமேசன் காடுகள் (Amazon Forrest) எரிந்த நிலையில், உலகின் இரண்டாவது பெரிய காடான ஆப்பிரிக்கக் காடுகளும் (sub-Saharan Africa) எரிய ஆரம்பித்திருக்கிறது.
உலகின் இரண்டாவது நுரையீரல் என இந்த மழைக்காடுகள் அழைக்கப்படுகின்றன.
கொங்கோ, கமரூன், அங்கோலா ஆகிய நாடுகளினூடாகப் பரவியிருக்கும் இந்தக் காடுகளினூடே தீயும் வெகுவாகப் பரவிவிட்டது. ஒரு மில்லியன் சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டவை இந்தக் காடுகள்.
3.3 மில்லியன் சதுர கிலோமீற்றர் சதுர பரப்பளவுள்ள இந்த காடுகளில் மிகப்பெரியளவில் தீப்பற்றியுள்ளது. காட்டுத்தீ தொடர்பாக நாசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
![]()
![]()
