
உங்களுக்கு வாகன கனவு உள்ளதா? கனவில் விழுந்த இடி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என்றால் இந்த வரி அமுலாகும்.
இந்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய என்ஜின் திறன் 2300க்கு அதிகமான டீசல் வாகனங்கள், 1800க்கும் அதிகமான பெட்ரோல் வாகனம் மற்றும் 200 கிலோவேட் மின்சார திறன் கொண்ட வாகனங்களுக்காக இந்த வரி அறவிடப்படவுள்ளது.
அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அல்லது இலங்கையில் பொருத்தப்படும் அனைத்து வாகனங்களும் பாரியளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.