புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.