கழுகுடன் களமிறங்கும் சஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரை எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினர் அறிவிக்காதவிடத்து புதியதொரு கட்சியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தான் பொறுப்புடன் கூறுவதாக மாத்தளை நகராதிபதி டஞ்சித் அலுவிஹார தெரிவித்துள்ளார்.

எவ்வறாயினும், ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி வேட்பாளர் பொறுத்தமான சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு இருக்க சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாக ‘கழுகு’ சின்னத்தில் புதிய கட்சியொன்றினை வாங்க நடவடிக்கை மும்முரமாக நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.