(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மீண்டும் தொழுநோய் பரவும் அபாயம் இருப்பதால், மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பதிவுகள், மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்டத்தின் தொற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரி கிருஷாந்த சமரவீர தெரிவித்தார்.
நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழுநோய் தொற்றக்கூடியது என்பதால், நோய் தொற்று எற்பட்டவரின் குடும்பமும் பரிசோதிக்கப்பட வேண்டுமெனவும், சமூகத்தில் 90% ஆனவர்கள் இயற்கையாகவே தொழுநோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர் எனவும் வைத்திய அதிகாரி கிருஷாந்த சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.