அரசியல் தொடர்பில் சங்கா உத்தியோகபூர்வ அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலில் தான் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் செய்யப்படும் புகைப்படங்களில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அது ஒரு வதந்தி எனவும் குமார் சங்கக்கார அவரது உத்தியாகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.