2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி பிரமானம் செய்து கொள்ளவுள்ளதாகவும், அத்தோடு அமைச்சரவை நியமனங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது
(riz)