கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.