ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளில் மேலும் முன்னோக்கி செல்வதற்கு வழியமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை மக்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்துடன் இணைந்து சமாதானம் மற்றும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாகவும் பான் கி-மூன் மேலும், வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(riz)