வரலாற்றை உருவாக்குகிறார் மாலிங்க – பும்ராவின் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபத்து- 20 போட்டியில், இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹெட்ரிக் உடன் அடுத்தடுத்து நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி, இருபத்து- 20 போட்டியில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், லசித் மாலிங்க கூறுகையில், ‘இந்தப் போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த மாதங்களாக இலங்கைக்கு கடினமான நேரம். இந்த நேரத்தில் இலங்கைக்கு வந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு நன்றி. எனது பந்துவீச்சு இரகசியம் பற்றி கேட்கிறார்கள். அதில் சிக்கல் ஏதுமில்லை. யார்க்கர்தான் எனது சிறப்பு. சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினேன்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2016 மற்றும் 2017 தொடர் ஒன்றின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக மாலிங்க தனது முதல் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லசித் மாலிங்கவின் பந்துவீச்சினை புகழ்ந்து கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

‘வரலாற்றை உருவாக்கும் லசித் மாலிங்க அற்புதமான பந்து வீச்சினை வீசியுள்ளார் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா குறிப்பிட்டுள்ளார்.’

‘லசித் மாலிங்க மேலும் மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாறி வருகின்றார்’ என பர்வேஸ் மகரூவ் தெரிவித்துள்ளார்.

‘நான்கு விக்கெட்களை நான்கு பந்துகளில் வீழ்த்தி இரண்டாவது தடவையாக சாதனை நம்பமுடியவில்லை‘ என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமட் கைவ் தெரிவித்துள்ளார்.

‘லசித் மாலிங்க தன்னால் செய்யக்கூடியதை இன்னமும் செய்கின்றார், அவரால் மாத்திரமே நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்த முடியும், அவர் இருதடவைகள் இதனை சாதித்துள்ளார், ஐந்து ஹட்ரிக்கினை எடுத்துள்ளார், வயது என்பது வெறுமனே ஒரு எண் மாத்திரமே’ எனவும இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஸ்சொப்ரா குறிப்பிட்டுள்ளார்.

த கிரேட்டஸ்ட் லசித் மாலிங்கவிடம் இன்னமும் அதே திறமையுள்ளது, அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என வர்ணனையாளர் ஹர்சா போக்லே டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.