கம்பஹா பகுதிகளில் 18 மணிநேர நீர்விநியோக தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக இன்று(10) காலை 09 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு கம்பஹா பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீழ்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை- மாபோலை, ஜ-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் வத்தளை, மகர மற்றும் ஜ-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அத்துடன் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.