(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளதாகவும் அந்த வித்தியாசத்தை தாம் அறிந்துள்ளதாகவும் இலங்கை அணியின் இருபதுக்கு – 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர். பாகிஸ்தானிலும் அவ்வாறு . நீங்கள் பிரபலமானவர் உங்களுக்கு எண்ணமில்லையா ?
நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிருவாகம் ஆகும். நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். என பதிலளித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமை அல்லவென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முரளி தொடர்புபட்டமை குறித்து ஏதேனும் கருத்துள்ளதா ? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவித்த போது.
எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும்.எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது.கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும்.என தெரிவித்தார்.