பயங்கரவாத அச்சுறுத்தல்; இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை கடிதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சின் ஊடாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதற்கான சாத்தியம் ஒன்று பற்றி நம்பகமான தகவல்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Image result for Threat of terrorism; Warning letter to Sri Lanka Cricket

எனவே, இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் தீவிர அவதானம் செலுத்தும்படியும் நிலைமை குறித்து ‘மீளாய்வு’ ஒன்றை செய்யும் படியும் இலங்கை கிரிக்கெட் சபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த சுற்றுப்பிரயாணம் இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை கராச்சி மற்றும் லாஹூர் நகர்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.