இலங்கை அணி மீது பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்தால் பரபரப்பு; இந்தியாவின் நிலை என்ன?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை அணி மீது அந்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர், பாகிஸ்தான் சென்று விளையாடினால், ஐபிஎல் போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன கருத்தில் உள்ளது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.