(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை குறைக்கப்படாததால் பாணின் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 05 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்க பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்திருந்தன.
அதன்படி, 90 ரூபாவாக காணப்பட்ட கோதுமை மாவின் விலை 95 ரூபாய் 50 சதமாக அதிகரிக்கப்பட்டது.
இதன் காரணமாக , 450 கிராம் பாணின் விலையை 02 ரூபாவாலும், ஏனைய பேக்கரி உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும் குறித்த சங்கங்கள் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.