(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் முக்கிய சகாக்கள் இருவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வரும் அஜித் பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
தலைமைத்துவத்தை இழிவுபடுத்தியமை மற்றும் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த காரணத்தினால் இருவருக்கும் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.