(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்தியா கிரிக்கெட் அணியும் அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் தயக்கம் செலுத்துவதில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இந்திய உள்ளூர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், லசித் மாலிங்க உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி இருப்பது அவர்களது நிலைப்பாடு ஆகும். அவ்வாறு இருக்க இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதிலிருந்து அவர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது எனது கணிப்பு, அவ்வாறு இருக்க இந்தியா- காஷ்மீர் பிரச்சினையும் அவர்களை அச்சம் கொள்ள செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.