(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஹட்டன், என்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களினால் இன்று(15) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்துகம பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் சடலம் ஒன்றை புதைத்த சம்பவம் தொடர்பிலான வழக்கில்,தோட்ட உரிமையாளர் சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில் அதை மீறி சடலத்தை புதைத்த விவகாரத்தில் கடந்த 10ம் திகதி பாலித கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.