(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரம் மிக முக்கியமான திருமணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவின் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் பின்னர் வீரக்கெட்டிய கால்டன் வீட்டில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 7000 விருந்தினர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் போது வெட்டப்பட்ட கேக் ஒன்றின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பல தரப்பினர் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், சிறப்பான சில நிமிடங்கள் மாத்திரம் நீடிக்கும் திருமண காணொளியும் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று பாராளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ஸ பிரபல வர்த்தகரின் மகள் லிமினி வீரசிங்கவை திருமணம் செய்து கொண்டார்.