ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
சமாதானமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற்றமை தொடர்பில் பான் கீ மூன் தனது பாராட்டுக்களை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் அவ்வழைப்பின்; தேர்தல் இவ்வாறு சமாதானமான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்க ஆட்சியின் திறனைக் காட்டுகிறதென பான் கீ மூன் நேற்று மாலை மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் ஜனநாயகம் நிலவுகின்றதென்பதற்கு இத் தேர்தல் தெளிவான சாட்சி என கூறியுள்ளார்.
இதற்கிடையில் பொது தேர்தலில் வெற்றியீட்டியமை தொடர்பில் பிரித்தானியா வெளியுறவு செயலாளர் பிலிப் ஹெமொன்ட், ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து செய்தி ஒன்று அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தான் வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாக தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இலங்கை முழுவதும் நல்லிணக்க மற்றும் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)