(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்று கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயற்பாடு எதிர்வரும் சில வாரங்களில் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையிலேயே அவர் நேற்று தமது கடிதத்தை கையளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்தும் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரமதாஸவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு இடம் பெற்றதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந் நிலையிலேயே இக் கடிதத்தை கட்சித் தலைமையிடம் சஜித் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.