(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் இனிமேலும் தாமதம் ஏற்படக்கூடாது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் ஆர்வம் கொண்டுள்ளனர்.இவர்களில் ஒருவர், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் ஜே.வி.பி வேட்பாளராக அனுர குமாரவின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.