(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் கடந்த 16ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் முக்கியமான நிகழ்வாக அன்று பதிவாகிய நிலையில், ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட தொழில்நுட்ப முறையானது மக்கள் மத்தியில் பிழையான செய்தியினை வழங்கியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி குறித்த Apple ipad இல் வெறும் Biometric data வகையில், Lock screen wallpaper இனை Lock in செய்வதையே காண முடிந்ததாகவும், இது வெறும் கேளிக்கைக்குரிய ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

