(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நேற்று(18) நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது இருபதுக்கு -20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, 52 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019
அவ்வாறு இருக்க காஷ்மீர் – இந்தியா பிரச்சினை உக்கிரமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.