பிரதமர் ரணில் ஒரு துரோகி – ஹகீம் ஆவேசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என்று தான் நாடளாவிய ரீதியாக மேடைக்கு மேடை கூறிச் செல்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

நேற்று(19) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் அவர் இது தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் ஹகீம் இவ்வாறு தெரிவித்ததாக அங்கிருந்த அமைச்சர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான யோசனையானது ஜனநாயக ரீதியாக மக்களை அச்சத்துக்கு தள்ளுவது என்றும், தோல்விக்கு தாம் அஞ்சுவதாகவும் மக்கள் எண்ண வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அமைச்சர் ரவுப் ஹகீம் சூடான வாதத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகின்றது.