(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போட்டியை நடத்தும் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற போட்டியின் போது இரண்டு ரசிகர்கள் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினர். மைதானத்திற்குள் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜித் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களிடம் தங்கள் அன்பைக் காண்பிப்பதற்காக சில சமயங்களில் உச்சத்திற்கு செல்லலாம் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொஹாலி போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக மைதானத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.