(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரினால் முல்லைத்தீவில் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.
அவருடைய பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
இன்நிலையில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.
இதனால், குறித்த பகுதி தற்போது பதற்றம் நிறைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது.